Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இங்கிலாந்து விமான நிறுவனத்தால் பயணிகள் பாதிப்பு?

England
, புதன், 30 ஆகஸ்ட் 2023 (13:49 IST)
இங்கிலாந்து நாட்டில் அதிபர் ரிஷி சுனக் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, தொழில் நுட்பக் காரணமாக  200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 

இங்கிலாந்து  நாட்டின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் இன்று திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், விமானங்களுக்கு செல்லும் சிக்னல் சரியாகக் கிடைக்கவில்லை.

எனவே அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாததற்கு முன்பே,  பல விமானங்கள் ஐரோப்பிய நாடுகளில் விமான  நிலையங்களில் பத்திரமாக தரையிரக்கப்பட்டன.

இந்த தொழில் நுட்பக்கோளாறினால், இங்கிலாந்து நாட்டில் மட்டும் 200க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இதையடுத்து, தொழில்நுட்பக் குழுவினர், பல மணி நேர முயற்சிக்குப் பின் தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்தனர்.

இதனால், பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் கால அட்டவணை இன்றைய தினம் முழுவதும்  மாற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகிறது.

இதுபற்றி பிடிட்டானியாவின் தேசிய விமான சேவை, தொழில்நுட்ப கோளாறை எதிர்கொள்ளும் பொருட்டு, சில பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் விமானங்கள் தாமதம் ஆகலாம் என்று முன்னெச்சரிக்கை விடுத்திருந்த போதிலும் பல பயணிகள் இதனால் பாதிக்கப்பட்டனர். 

இதற்கு முன்னதாக இங்கிலாந்திற்கு சொந்தமான விமானம் கடந்த ஜூலையில், மோசமான வானிலை மற்றும் அதிக எடையால் புறப்படத் தாமதமாகி,19 பயணிகளை இறக்கிவிட்ட செய்தி பரப்பரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை.. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி வாழ்த்து..!