Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிலிருந்து திரும்பினால் 5 ஆண்டு ஜெயில் ! எங்கு தெரியுமா?

Webdunia
சனி, 1 மே 2021 (18:35 IST)
இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி வந்தால் 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என அந்நாடு அரசு எச்சரித்துள்ளது.

இந்தியாவின் உயிரைப் பறிக்கும் கொரொனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது.

இத்தொற்றைக் குறைக்கவும் இதிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது.  ஆனால் மக்களும் அரசுக்கு ஒத்துழைப்புக் கொடுக்காதவரை எதுவும் சாத்தியமில்லை என்ற கருத்து மக்களிடம் எழுந்துள்ளது.

இந்நிலையில் கொரொனா இரண்டாவது அலையில் தொற்றுக்குச் சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே ஆஸ்திரேலிய நாடு வரும் மே 15 ஆம் தேதிவரை இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.

இதன் தாக்கத்தால் நடப்பு ஐபிஎல் தொடர் பாதிக்கப்படுமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது. பெங்களூர் அணியிலிருந்து ஆஸ்திரேலியா வீரர்களான.

ஆடம் சம்பா, மேன் ரிச்சர்ட்சன் இருவரும் இத்தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவிவருவதால் அவர்கள் இந்த முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தங்கள் நாட்டின் எல்லையை மூடிவிட்டால் தங்களா செல்ல முடியாது என்று கருதி ஆஸ்திரேலிய வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் சொந்த நாடு திரும்ப உள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டது. ஆனால் அவர்கள் இன்னும்  ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகின்றனர்.

பிசிசிஐ ஐபிஎல் வீர்களை பாதுகாக்க தனிகவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய குடிமக்கள் நாடு திரும்பினால் 5 ஆண்டுகள்  ஜெயில் தண்டனை மற்றும் 66 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு நிதி கொடுப்பது ஆபத்து!! IMFக்கு இந்தியா விடுத்த கோரிக்கை!

இன்று மாலை, இரவு 6 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

ராணுவ நடவடிக்கைகளை நேரலை செய்ய வேண்டாம்.. ஊடகங்களுக்கு கோரிக்கை..!

அடுத்த தாக்குதல் எப்போது? பிரதமருடன் முப்படை தளபதி, ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை..!

போர் பதற்றத்தால் எரிபொருள் பற்றாக்குறையா? இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments