Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த நாட்டைவிட்டு வெளியேறும் மக்கள்

Webdunia
சனி, 14 ஆகஸ்ட் 2021 (19:49 IST)
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் - அரசு இடையே நடைபெற்று வரும் மோதலால் மோசமான சூழல் நிலவி வரும் நிலையில் மக்கள் அங்கிருந்து வெளியேற துவங்கியுள்ளது குறித்து ஐநா சபை கவலை தெரிவித்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு வந்த அமெரிக்க ராணுவம்
அங்கிருந்து சமீபத்தில் வெளியேறி வருகிறது. இம்மாத இறுதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறிவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது.

 
அமெரிக்கப் படைகள் வெளியேறுவதைத் தொடர்ந்து நிலைமை அங்கு மிக மோசமாக மாறிவருகிறது. ஆம், அமெரிக்கப் படைகள் நாடு திரும்பியதை அடுத்து தலிபான்களின் தாக்குதல் அதிகமாகியுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரான காந்தகாரையும் பிரபல கிரிக்கெட் மைதானத்தையும் தலிபான்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தலைநகர் காபுல் போன்ற முக்கிய நகரங்களையும் தலிபான்கள் நெருங்கிவருகிறார்கள் என தகவல் தெரிவிக்கின்றன.

இதே நிலையில் தலிபான்கள் முன்னேறிச் சென்றால், அவர்கள் தலைநகர் காபூலை 30 நாட்களில் தனிமைப்படுத்த முடியும், 90 நாட்களில் கைப்பற்றலாம் என்று அமெரிக்க உளவுத்துறை தகவலை மேற்கோள் காட்டி பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இத்தகைய சூழல் நிலவி வரும் நிலையில் மக்கள் அங்கிருந்து வெளியேற துவங்கியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
இதுவரை சுமார் 2 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தம் வீடுகளை விட்டு சொந்த நாட்ட விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகிறது. இது உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுல உக்காந்துக்கிட்டு ஆர்டர் போடுறாங்க! இந்திரா காந்தி இருந்திருந்தா..? - காங்கிரஸ் கொந்தளிப்பு!

பாகிஸ்தானின் திடீர் தாக்குதலில் ராணுவ வீரர் பலி! - ராஜஸ்தான் முதல்வர் இரங்கல்!

போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று விளக்கம் அளிக்கிறது இந்திய ராணுவம்..!

ராணுவ வீரர்கள் எல்லையில போய் சண்டை போட்டார்களா? செல்லூர் ராஜூவின் சர்ச்சை பேச்சு..!

சண்டை நிறுத்தம் ஏற்பட்டாலும் பகல்ஹாம் பயங்கரவாதிகளை சும்மா விடக்கூடாது: ஒவைசி

அடுத்த கட்டுரையில்
Show comments