Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக அழகியானார் பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண்

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2018 (11:00 IST)
2018-ம் ஆண்டுக்கான உலக அழகியாக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கேட்ரியோனா கிரே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஓவ்வொரு வருடமும் உலக அழகிக்கானப் போட்டிகள் ஒவ்வொரு நாட்டில் நடைபெற்று வருகின்றன. அழகு சாதனப் பொருட்கள் விற்பனை மற்றும் அவற்றுக்கான சந்தையை ஒவ்வொரு நாட்டிலும் உருவாக்குதல் போன்றப் பல மில்லியன் டாலர் வணிகம் இந்த உலக அழகிப் போட்டிகளின் பின்னால் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் உலக அழகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 2018-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி  தாய்லாந்தில் நடைபெற்றது. இது 67 வது உலக அழகிப் போட்டியாகும். 94 நாடுகளைச் சேர்ந்த 92 பெண்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். 13 ஆண்டுகளுக்குப் பின் தாய்லாந்து மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டியை நடத்தியது.

இதற்கான போட்டிகளில் பல கட்டங்களாக பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டன. உலக அழகிப் போட்டிக்காக இந்தியாவில் இருந்து மும்பையைச் சேர்ந்த நேஹல் சுதாஸமா என்ற பெண்ணும் பங்கேற்றிருந்தார். ஆனால் அவர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறவில்லை.

அரையிறுதிச் சுற்றில் ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, கோஸ்டாரிகா, குராகோ, இங்கிலாந்து, ஹங்கேரி, இந்தோனேசியா, அயர்லாந்து, ஜமைக்கா, நேபாளம், பில்ப்பைன்ஸ், போலந்து, பியூரிட்டோ ரிகோ, தென் ஆப்பிரிக்கா, தாய்லாந்து, அமெரிக்கா, வெணிசுலா, வியட்நாம் நாடுகளைச் சேர்ந்த பெண்கள் தகுதி பெற்றனர். இந்த பெண்களுக்கிடையே நடந்த போட்டியில் வியட்நாம், பியூரிட்டோரிகோ, பிலிப்பைன்ஸ், வெணிசுலா,தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த பெண்கள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

இறுதிச்சுற்றில், நடைபெற்றப் போட்டியில் பிலிப்பைன்ஸை சேர்ந்த கேட்ரியோனா கிரே இந்த ஆண்டுக்கான உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கைதான யூடியூபர் ஜோதியின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா? அதிர்ச்சி தகவல்..!

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது.. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை: விக்ரம் மிஸ்ரா

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று... சிங்கப்பூர், ஹாங்காங்கில் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments