ஈரான் தலைவர் காமேனியை போட்டுத்தள்ள ப்ளான்.. ஆனால்..? - இஸ்ரேல் அமைச்சர் ஓபன் டாக்!

Prasanth K
வெள்ளி, 27 ஜூன் 2025 (14:38 IST)

ஈரான் - இஸ்ரேல் இடையேயான போரின் போது ஈரான் நாட்டின் உச்சத்தலைவர் அயதுல்லா காமேனியை கொல்ல முயற்சித்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கட்ஸ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஈரான் - இஸ்ரேல் இடையே சமீபத்தில் போர் மூண்ட நிலையில் இரு நாடுகளும் ஏவுகணைகளை வீசி தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து இஸ்ரேல் வான் படைகள் ஈரானின் அணுசக்தி மையங்களை குறிவைத்து தாக்கின. 12 நாட்கள் போர் நடந்த பின்னர் இருநாடுகளிடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது,

 

இந்நிலையில் போர் குறித்து சமீபத்தில் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் கட்ஸ் “நாங்கள் ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா காமேனியை ஒழித்துக்கட்ட நினைத்தோம். ஆனால் எங்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை தெரிந்துக் கொண்ட காமேனி, மிகவும் ஆழமான நிலத்தடி சுரங்கத்தில் பதுங்கிக் கொண்டார்.

 

காமேனியை கொல்ல அமெரிக்காவின் அனுமதியை நாங்க கேட்க தேவையிருந்திருக்காது. ஈரான் அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் அவர்களை தாக்க ட்ரம்ப் எங்களுக்கு பச்சைக் கொடி காட்டினார்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொள்கை இல்லாமல் கூக்குரலிட்டு, கும்மாளம் போடும் கூட்டமல்ல திமுக: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் உள்பட 7 போரை நான் தான் நிறுத்தினேன்: மீண்டும் டிரம்ப் பேச்சு..!

மெட்ரோ ரயில் மூலம் எடுத்து செல்லப்பட்ட இதயம்.. 20 நிமிடத்தில் 7 ரயில் நிலையங்களை கடந்தது..!

இந்தியா உங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்.. புதிய நேபாள பிரதமர் சுசீலாவுக்கு மோடி தகவல்..!

குலுங்கியது திருச்சி.. தவெக தொண்டர்கள் உற்சாகம்.. விஜய் வரவால் போக்குவரத்து பாதிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments