Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேசத்தில் இருந்து இந்துக்கள் வெளியேற தயாராக உள்ளனர்: ஐநாவுக்கு மனு அனுப்பிய ஆர்எஸ்எஸ்

Mahendran
புதன், 14 ஆகஸ்ட் 2024 (15:21 IST)
வங்கதேசத்தில் உள்ள 15 லட்சம் இந்துக்கள் அந்நாட்டில் இருந்து வெளியேற தயாராக இருக்கின்றனர் என்றும் ஐநா மனித உரிமை பேரவைக்கு ஆர்எஸ்எஸ் மனு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்கதேசத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என இந்துக்கள் அந்த நாட்டை விட்டு வெளியேற தயாராக இருப்பதாகவும், இந்துக்கள் மீது குறி வைத்து தாக்கப்படுவதால் அங்கிருந்து வெளியேறி அடைக்கலம் தேடி வருவதாகவும் அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஐநா உதவி வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவில் சுமார் மூன்று லட்சம் பேர் கையெழுத்து உள்ளதை அடுத்து ஐநா மனித உரிமை பேரவை இந்த மனு மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது குறிப்பாக இந்துக்கள் மீதான வன்முறை தொடர்ந்து வருவதாகவும் அதற்கான சாட்சிகளை ஐநா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்க தயாராக உள்ளோம் என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்


Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments