ஸ்பெயின் நாட்டில் நீண்ட காலமாக உறக்கத்தில் இருந்த எரிமலை திடிரென வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் கெனரி தீவுப்பகுதியில் உள்ள எரிமலை திடீரென வெடித்து சிதற தொடங்கியுள்ளதால் அந்நாட்டில் பரபரப்பு எழுந்துள்ளது. எரிமலையை சுற்றி நான்கு கிராமங்கள் இருந்த நிலையில் அங்குள்ளவர்கள் வேகவேகமாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த எரிமலை வெடிப்பு சம்பவத்தால் ஐ.நா பொது சபை கூட்டத்திற்கு செல்லும் பயணத்தை அந்நாட்டு பிரதமர் பெட்ரோஸ் சாஞ்செஸ் ரத்து செய்துள்ளார்.