இலங்கையில் கடந்த மாதம் தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலால் 253 பேர் பலியான நிலையில் தற்போதுதான் மெல்ல மெல்ல இலங்கை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது
இந்த நிலையில் ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவான ஒரு கருத்தால் இலங்கையின் சிலாபமில் என்ற பகுதியில் நேற்று இரு பிரிவினர்களுக்கு இடையே கலவரம் ஏற்பட்டது. இதனையடுத்து இன்று காலை வரை அந்த பகுதியில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை முடக்கி இலங்கை தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், இவ்வாறு சர்ச்சைக்குரிய பதிவு செய்பவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை அரசு எச்சரித்துள்ளது