Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியுசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பழிக்குப் பழியா ? – இலங்கை அமைச்சர் புதுத்தகவல் !

Webdunia
செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (15:55 IST)
நியுசிலாந்தில் மசூதிக்குள் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பழிவாங்கவே இலங்கையில் தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது வெவ்வேறு பகுதிகளில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  தாக்குதலுக்கு இதுவரை 310 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். மேலும் 500 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதனால் நேற்று நள்ளிரவு முதல் இலங்கையில் அவசரநிலை பிரகரனப்படுத்த இருப்பதாக அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார். இன்று இலங்கையில் தேசிய துக்க தின நாள் அனுசரிக்கப்படவிருக்கிறது.

இந்நிலையில் முதல்கட்ட விசாரணையில் நியுசிலாந்தில் மசூதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பழிவாங்கவே இலங்கையில் தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவன் விஜேவர்தனே தெரிவித்துள்ளார்.  மேலும் இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்புதான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகதாகவும் அவர் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்கியது லட்டு தோஷம்! திருப்பதியில் நடந்து வரும் சிறப்பு யாகம்!

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments