Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோத்தா வீட்டு பதுங்கு குழி.. அள்ள அள்ள பணம்! – அதிர்ச்சியில் இலங்கை மக்கள்!

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2022 (13:46 IST)
இலங்கை அதிபர் கோத்தாபய ராகபக்சே வீட்டில் கட்டுக்கட்டாக பணத்தை போராட்டக்காரர்கள் கண்டெடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் மக்கள் எரிப்பொருள், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த சில மாதங்கள் முன்னதாக மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்‌ஷே பதவியை விட்டு தப்பி ஓடினார். பின்னர் ரணில் விக்ரமசிங்கெ பிரதமராக பதவியேற்று நிலமையை சரிசெய்ய முயன்றார்.

ஆனாலும் நிலைமை கட்டுக்குள் வராததால் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. இதனால் அதிபர் கோத்தாபய ராஜபக்‌ஷே வீட்டை போராட்டக்காரர்கள் சூறையாடியுள்ளனர். அதிபர் கோத்தாபய அங்கிருந்து தப்பி தலைமறைவாகியுள்ளார். கோத்தாபய வீட்டில் போராட்டக்காரர்கள் சுற்றி வரும் நிலையில் அங்கு ஒரு பதுங்குக்குழி இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அங்கு சோதனை செய்தபோது கட்டுக்கட்டாக உள்நாட்டு, வெளிநாட்டு பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments