Webdunia - Bharat's app for daily news and videos

Install App

27 பேர் கட்டிப்போட்டு சுட்டுக்கொலை..? தலிபான் செயலால் பெரும் அதிர்ச்சி!

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (09:26 IST)
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடந்து வரும் நிலையில் 27 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் தலிபான் அமைப்புக்கு எதிராகவே ஆப்கானிஸ்தானில் சில கிளர்ச்சி படைகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்த கிளர்ச்சி படைகளை ஒடுக்குவதில் தலிபான்கள் தீவிரம் காட்டுகின்றனர். அந்த வகையில் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் கடந்த மாதம் நடந்த சண்டையில் 40 கிளர்ச்சியாளர்களை கொன்றதாகவும், நூறுக்கு மேற்பட்டவர்களை சிறை பிடித்ததாகவும் தாலிபான் அமைப்பு தெரிவித்திருந்தது.

ALSO READ: ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது… ஜெய்ஷா திட்டவட்டம்!

இந்நிலையில் அந்த கைதிகளில் 27 பேரை கை, கால்களை கட்டுப்போட்டு கொடூரமான முறையில் தாலிபான் அமைப்பினர் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தை தலைமையாக கொண்டு செயல்படும் விசாரணை அமைப்பு ஒன்று இதுகுறித்த அதிர்ச்சிகரமான வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து தாலிபான் அமைப்பு எந்த பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல்: டிரம்ப் வெற்றிக்குப் பிறகு ரஷ்யா - யுக்ரேன் சண்டை மேலும் தீவிரம்

கருணாநிதி குடும்பத்தில் பிறக்கவில்லை என்றால், ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது: ஈபிஎஸ்

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

டிரம்ப் - புதின் முக்கிய பேச்சுவார்த்தை.. உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வருகிறதா?

தமிழர்களின் நிலங்கள் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்: இலங்கை அதிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments