Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரம்ஜானுக்காக மூன்று நாள் போருக்கு லீவு! – தலிபான் அமைப்பு அறிவிப்பு

Webdunia
திங்கள், 10 மே 2021 (10:33 IST)
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து குண்டுவெடிப்பு போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் தலீபான் அமைப்பு ரம்ஜானுக்காக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத அமைப்பான தலீபான் பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி வருவதும், அமெரிக்க படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளில் தலீபான்களுடன் அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானத்தை நிறுவ முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஆப்கானிஸ்தானின் காபூல் பகுதியில் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தலீபான் செய்தி தொடர்பாளர் முகமது நயீம் தெரிவித்துள்ள செய்தியில் ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளதை கருத்தில் கொண்டு எதிரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களை 3 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments