உக்ரைன் மீது ரஷியா கடந்தாண்டு தொடக்கத்தில் போர் தொடுத்தது.
இரு நாடுகளிடையே இப்போர் தொடங்கி 1 ஆண்டை நெருங்கியுள்ள நிலையில், ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைன் நாட்டிற்கு மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் தொடர்ந்து நிதி உதவி மற்றும் ஆயுதத் தளவாடங்கள் அளித்து உதவி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில்,மேற்கத்திய நாடுகளும், அமெரிக்காவும் உக்ரைனுக்கு உதவக்கூடாது என கடும் எச்சரிக்கை விடுத்தது ரஷியா.
இந்த நிலையில்,நேற்று முன் தினம் ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் உக்ரனுக்கு லெப்போர்ட் -2 ரக பீரங்கிகள் 14 அனுப்பி வைப்பதாக அறிவித்தார்.
அதேபோல் அமெரிக்காவும் அதி நவீன பீரங்கிகள் அனுப்ப முடிவுசெய்துள்ளது. இதை உக்ரைன் அதிபர் வரவேற்றுள்ளார்.
ஆனால், இதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் உக்ரைனுக்கு உதவுவது போரை கடுமையாக்கும் என எச்சரித்துள்ளது.