உக்ரைன் – ரஷ்யா இடையே போர் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் உக்ரைனுக்கு மேலும் ஆயுத நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.
அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டை நெருக்கிவிட்ட நிலையில் போர் தொடர்ந்து நடந்து வருகிறது. ராணுவ பலத்தில் அதிகமாக இருக்கும் ரஷ்யாவை, உக்ரைன் நேட்டோ நாடுகளின் பண மற்றும் ஆயுத உதவியால் தொடர்ந்து சமாளித்து வருகிறது.
இந்நிலையில் சமீபமாக உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் புதின் யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. எனினும் போர் நடவடிக்கைகளும் தொடர்ந்தே வந்தன.
இந்நிலையில் தற்போது உக்ரைனுக்கு மேலும் 2.5 பில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்கா அளித்துள்ளது. இதில் 59 ப்ராட்லி சண்டை வாகனங்கள், கவச வாகனங்கள், வெடிமருந்துகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்டவை வாங்கப்பட உள்ளன. நேட்டோ நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுத உதவி அளித்து வருவது ரஷ்யாவை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.