இந்தியாவில் டிக்டாக் செயலிகு தடை விதிக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்காவிலும் டிக்டாக் செயலுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நமது அண்டை நாடான பாகிஸ்தான் டிக்டாக் செயலிக்குத் தடை விதித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிக்டாக் நிறுவனம் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசிடம் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்திவந்தது.
இந்நிலையில் இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தானில் ஒழுக்கமற்ற மற்றும் ஆபாச வீடியோக்கள் முடக்கப்படும் என்று உறுதிச்சான்று அளிக்கப்பட்ட நிலையில் டிக்டாக் செயலி மீதான தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியுள்ளது,.