Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை: டிரம்ப் அதிரடி

Webdunia
புதன், 1 மார்ச் 2017 (15:20 IST)
அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு விசா கட்டுப்பாட்டில் சிறப்பு சலுகை வழங்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார்.


 

 
அமெரிக்காவுக்குள் நுழைய 7 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா செல்ல விசா கட்டுபாடு ஏற்படுத்தப்பட்டது. அதிபர் டிரம்ப்பின் இந்த அதிரடி உத்தரவுக்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்கா செல்பவர்களுக்கு சாதகமான விசா நடைமுறையை அமல்படுத்த டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
அமெரிக்காவில் மீண்டும் அதிகப்படியான வேலை வாய்ப்புகளை உருவாக்க இருக்கிறேன். நம் நாட்டு பணியாளர்களை பாதுகாக்க குடியேற்ற முறைகளை சட்டப்பூர்வமாக மாற்றியமைப்பது அவசியமானதாகும். 
 
எச்-1பி விசா மூலம் அமெரிக்காவில் குடியேறும் இந்திய ஐடி பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமானதாகும். இது தவிர இந்தியாவில் இருந்து ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் என உயர் பதவி வகிக்கும் பணியாளர்கள் அதிகம் பேர் அமெரிக்காவில் குடியேறியுள்ளனர்.
 
இதனால் தகுதி அடிப்படையிலான குடியேற்ற அமைப்பு முறை இந்தியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும், என கூறியுள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

விஜய் அரசியல் வருகையால் தேமுதிகவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. தொடங்கியது பேச்சுவார்த்தை..!

ஆடை அணியாமல் திருமணம் செய்த 29 ஜோடிகள்.. வினோத நிகழ்வு..!

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments