Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுக்காகதானே காத்திருந்தேன்! – இந்திய எல்லை விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் ட்ரம்ப்!

Webdunia
வியாழன், 28 மே 2020 (08:25 IST)
இந்தியா- சீனா எல்லையில் பதட்டம் நிலவுவதால் இரு நாடுகளுக்கிடையே சமாதானம் பேச தயார் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியா – சீனா இடையே லடாக் பகுதியில் எல்லை பிரச்சினை தீவிரமடைந்து வருகிறது. எல்லைப்பகுதியில் இந்தியா சாலைகள் மற்றும் பாலங்கள் அமைப்பதை சீனா எதிர்த்து வருகிறது. அதேசமயம் சீனா இராணுவ வீரர்களையும், தளவாடங்களையும் எல்லையில் குவித்து வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் இருமுறை சீன வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே கைகலப்பு சண்டை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் இந்தியாவும் எல்லைப்பகுதியில் இராணுவத்தை பலப்படுத்தியுள்ளது.

பொதுவாக எந்த நாட்டின் எல்லை பிரச்சினையாக இருந்தாலும் தாமாக முன்வந்து ஆஜராகும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த விவகாரத்திலும் சமாதானம் பேச முன்வந்துள்ளார். ஏற்கனவே இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் மூக்கை நுழைக்க ட்ரம்ப் முயன்றபோது அதை இந்தியா தவிர்த்துவிட்டது. இந்நிலையில் ஏற்கனவே சீனா மீது பயங்கர வெறுப்புடன் உள்ள ட்ரம்ப் பஞ்சாயத்து செய்வதை சீனா கண்டிப்பாக ஏற்காது. இந்தியாவும் அண்டை நாட்டு விவகாரத்தில் அமெரிக்காவை உள்ளே இழுக்க விரும்பாது என உலக அரசியல் வட்டாரங்களில் பேச்சாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் மீண்டும் கோடை காலமா? நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு..!

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்!

அடுத்த 2 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments