ஓவராய் ஆடிய டிவிட்டருக்கும் ஆப்பு

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (11:01 IST)
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் பக்கங்கள் முடங்கியதை கேலி செய்த ட்விட்டர் தளமும் முடங்கியது.
 
உலகம் முழுவதும் செல்போன் பயனாளர்கள் வாட்ஸப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென பேஸ்புக் நிறுவனத்தின் அனைத்து செயலிகளும் முடங்கியது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில் இன்று காலை இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டது.
 
ஆனால் நேற்று இரவு ஆதங்கமடைந்த நெட்டிசன்கள், ட்விட்டரில் பல்வேறு வகையான மீம்ஸ்களை பதிவிட்டு முடங்கிய செயலிகளை கலாய்த்தனர். பயனாளர்களின் பதிவுகள் மற்றும் மீம்ஸ்களுக்கு வலு சேர்க்கும் விதமாக ட்விட்டர் நிறுவனமும் அனைவருக்கும் பதில் அளித்து வந்தது. 
 
அதிக பயனாளர்கள் ஒரே நேரத்தில் ட்விட்டர் பக்கம் திரும்பியதால் அதன் சேவையும் ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டது. இதனால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் பக்கங்கள் முடங்கியதை கேலி செய்த ட்விட்டர் தளமும் முடங்கியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கங்கை - காவிரி நதிகள் இணைக்கப்பட்டால் இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது: சந்திரபாபு நாயுடு

தவெக அரசின் வெள்ளை அறிக்கை வெறும் ரீல்ஸ்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சாடல்!

மகாபலிபுரம் கலைஞர் அறிவாலயம்: இந்து சமய அறநிலையத்துறை நிலம் மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு!

சிதம்பரம் நடராஜர் கோவில் நிதி முறைகேடு: ரூ.6.32 கோடி எங்கே போனது?

எவ வேலு மீது இன்னொரு நடவடிக்கை.. திருவண்ணாமலை கோவில் 109 பணி நியமனங்கள் ரத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments