Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் எதிரொலி: 40 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.நா. அவசர கூட்டத்தில் இவர்கள்..!

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (10:25 IST)
சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.நா. பொது சபையின் அவசர கூட்டத்திற்கு பாதுகாப்பு கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது.

 
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 5 நாட்களாக கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் இன்று ஐநா சபையின் அவசர கூட்டம் கூட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போது தாக்குதல் தொடர்பாக விவாதம் செய்ய ஐநா சபையின் அவசர கூட்டம் இன்று நடைபெற உள்ளது. 
 
உக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்பட்ட வாய்ப்பு இருப்பதாக ஐநா சபையின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் அவசர பொதுக்குழு கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு 193 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு ஐ.நா. பொது செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.நா. பொது சபையின் அவசர கூட்டத்திற்கு பாதுகாப்பு கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
80-க்கும் மேற்பட்ட நாடுகள் உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல்களுக்கு எதிரான நிலைப்பாட்டினை கொண்டு இருப்பதால், கடந்த முறை போல இல்லாமல் இந்த கூட்டத்தில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளது என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments