உக்ரைன் மீது உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா போர் தொடுத்த நிலையில் ரஷ்ய படைகளுக்கு தக்க பதிலடி அளித்து வரும் உக்ரைன் வீரர்கள்.
உக்ரைன் மீது உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால் ரஷ்யாவை கண்டிக்கும் விதமாக உலக நாடுகள், பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன. போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்த மூன்று கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் தற்போது உக்ரைனின் தலைநகர் கீவ் நகரை நோக்கி ரஷ்யாவின் பிரம்மாண்டமான ராணுவம் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாக்ஸர் டெக்னாலஜி நிறுவனம் எடுத்த செயற்கைக்கோள் படங்களில் கீவ் அருகே 64 கி.மீ நீளத்திற்கு ரஷ்ய ராணுவ வாகனங்கள் அணிவகுத்து நிற்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனிடையே தனது வலிமையான படைகள் மூலம் உக்ரைனை எளிமையாக வீழ்த்தலாம் என்ற ரஷ்யாவின் எண்ணத்தை உக்ரைன் படையினர் பொய்யாக்கி வருகிறார்கள். பல இடங்களில் ரஷ்ய படைகளுக்கு தக்க பதிலடி அளித்து வரும் உக்ரைன் வீரர்கள், ரஷ்ய கவச வாகனங்களை கைப்பற்றி தங்கள் வசமாக்கி வருகின்றனர்.