Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் வந்தால் சொல்லியனுப்பு..! போர் முனையில் ப்ரபோஸ்! – வைரலாகும் வீடியோ!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (15:44 IST)
உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் தன் காதலிக்கு ராணுவ வீரர் ஒருவர் காதலை தெரிவிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 14 நாட்களுக்கும் மேலாக போர் தொடர்ந்து உள்ள நிலையில் உக்ரைனில் சில நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களால் மக்கள் பலர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலம் நாடி செல்கின்றனர். வெளிநாட்டு மக்கள் உக்ரைன் எல்லை வழியாக பிற நாடுகளுக்கு சென்று அங்கிருந்து சொந்த நாடு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் உக்ரைன் ராணுவ வீரர்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் பலரும் ராணுவத்தில் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக போராடி வருகின்றனர். போர் வீடியோக்களுக்கு நடுவே ஒரு காதல் வீடியோ சமீபமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் உக்ரைன் எல்லைப்பகுதியில் வாகன சோதனை நடைபெறுகிறது. வாகனத்தில் வந்தவர்கள் கைகளை பின்னால் கட்டியபடி நிற்க வீரர்கள் அவர்களை சோதனை செய்கின்றனர். அப்போது அதில் இருந்த பெண் ஒருவருக்கு ராணுவ வீரர் ஒருவர் மலர் கொத்தை அளித்து தன் காதலை வெளிப்படுத்துகிறார். உடனே மகிழ்ச்சியில் அந்த பெண் அந்த வீரரை கட்டியணைத்து கொள்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments