திருமணம் ஆகாதவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள சட்டபூர்வமாக அனுமதிக்கப்படுவதாக சீன அரசு தெரிவித்துள்ளது
சீனாவில் சமீப காலமாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதை அடுத்து அந்நாட்டில் மக்கள் தொகையும் குறைந்து வருகிறது
60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவில் மக்கள் தொகை சரிந்துள்ளதாகவும் இதனை அடுத்து பிறப்பை அதிகரிக்க சீனா ஒரு சில நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது
ஏற்கனவே அமலிலிருந்த ஒரு குழந்தை என்ற திட்டம் தளர்த்தப்பட்டது என்பதும் ஒரு தம்பதியினர் அதிகபட்சமாக மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள நாடு அனுமதி வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் எவ்வளவு குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் திருமணம் ஆகாதவர்களுக்கு பிறந்த குழந்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படும் என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது