Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிபர்னா இஷ்டத்துக்கு வரி போடுவீங்களா? ட்ரம்ப் விதித்த உலக நாடுகள் வரிக்கு தடை! - நீதிமன்றம் உத்தரவு!

Prasanth Karthick
வியாழன், 29 மே 2025 (14:41 IST)

உலக நாடுகள் மீது ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிவிதிப்பை தடை செய்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவுடன் மற்ற நாடுகள் செய்யும் வர்த்தகத்தில் பரஸ்பர வரிவிதிப்பு விதிக்கப்படும் என அறிவித்தார். அதன்படி ஒவ்வொரு நாட்டிற்கும் எவ்வளவு சதவீதம் வரி என்ற அட்டவணையையும் அவர் வெளியிட்டார். 

 

ஆனால் ட்ரம்ப்பின் இந்த வரிவிதிப்பை இல்லினாய்ஸ், டெக்ஸாஸ், டகோடா உள்ளிட்ட அமெரிக்க மாகாணங்களே கடுமையாக கண்டித்தன. இதுகுறித்து இல்லினாய்ஸ் நீதிமன்றத்தில் அமெரிக்க மாகாணங்கள் ஒன்றுகூடி வழக்குத் தொடர்ந்தன. அதில் வரிவிதிப்பை நிர்ணயம் செய்ய பாராளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும், சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் படி, அதிபர் வரியை நிர்ணயிக்கலாம் என்றாலும், தற்போது அப்படியான அவசர நிலை இல்லாதபோது ட்ரம்ப் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ட்ரம்ப் அதிபராக இருப்பதாலேயே அதிகாரத்தை மீறி செயல்பட முடியாது என்று கண்டித்ததுடன், ட்ரம்ப்பின் பரஸ்பர வரிவிதிப்பிற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நெல்லை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கும் வழக்கு.. சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..!

இன்று ஒரே நாளில் இரண்டு முறை எகிரிய தங்கம் விலை.. அதிர்ச்சி தகவல்..!

அதிபர் பதவிக்கு தயாராகி வருகிறேன்.. அமெரிக்க துணை அதிபர் டிஜே வான்ஸ் பேட்டி..!

"எதன் அடிப்படையில் SIR?" ஆர்டிஐ கேள்விக்கு தேர்தல் ஆணையம் அதிர்ச்சி பதில்

அடுத்த கட்டுரையில்
Show comments