Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் டி.என்.ஏவை செக் பண்ணுன டாக்டர்ஸ் ஷாக் ஆகிட்டாங்க! – இஷ்டத்துக்கு ரீல் விடும் ட்ரம்ப்!

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (14:56 IST)
கொரோனாவிலிருந்து மீண்டு வந்த அதிபர் ட்ரம்ப் கொரோனா குறித்து பேசும் விஷயங்கள் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளன.

அமெரிக்க தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் அதிபர் ட்ரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா இருந்ததால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு கொரோனா குணமானதாக ட்ரம்ப் மற்றும் மெலனியா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்கள்.

பிறகு கொரோனா குறித்து பேசிய ட்ரம்ப் “கொரோனா கொடியது என்று மக்கள் பயப்பட தேவையில்லை. அது சீசனுக்கு வரும் காய்ச்சல் போன்றதுதான்” என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. கொரோனாவால் லட்சக்கணக்கான மக்கள் இறந்துபோயுள்ள நிலையில் ட்ரம்ப் இப்படி பேசியது எதிர்கட்சியினரிடையேயும் எதிர்ப்பை கிளப்பியது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் ட்ரம்ப் பேசிய போது “கொரோனா பரிசோதனைக்காக என் ரத்தத்தை ஆய்வு செய்த மருத்துவர்கள் வியந்து போனார்கள். உங்கள் உடம்பில் இருப்பது டி.என்.ஏவே அல்ல.. அது யூ.எஸ்.ஏ (அமெரிக்கா) என்றார்கள்” என பேசியதாக கூறப்படுகிறது. தேர்தல் பிரச்சார யுக்தியாக ட்ரம்ப் அதை பேசியிருப்பதாக கூறப்பட்டாலும், சமூக வலைதளங்களில் அவரது பேச்சு கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அண்ணா சொன்னதை மனசுல வைங்க.. தைரியமா மக்கள்கிட்ட பேசுங்க! - தவெக தலைவர் விஜய்!

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

அடுத்த கட்டுரையில்
Show comments