Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிபர் ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதி! – கொரோனா தீவிர சிகிச்சைகள் தொடக்கம்!

Webdunia
சனி, 3 அக்டோபர் 2020 (08:58 IST)
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் நவம்பரில் நடைபெற உள்ள நிலையில் குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க மாகாணங்கள் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார்.

அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவில் மெலனியா ட்ரம்ப்புக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதை தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ட்ரம்ப் “இருவரும் உடனடியாக தனிமைப்படுத்திக் கொண்டு கொரொனாவில் இருந்து விரைவில் மீண்டு வருவோம்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று வால்டர் ரீட் மருத்துவமனையில் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் நலமாக இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் மூலமாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி செங்கோட்டை என்னுடையது.. வழக்கு தொடர்ந்த பெண்.. சுப்ரீம் கோர்ட் பதில்..!

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானுக்கும் பாதிப்பு..! உலக நாடுகள் வச்ச ஆப்பு..!

இந்தியாவுக்கு முழு ஆதரவு.. டெல்லி வரவும் புதின் ஒப்புதல்.. பாகிஸ்தான் அதிர்ச்சி..!

இந்தியாவுக்குள் ஊடுருவிய 22 பாகிஸ்தான் பெண்கள்.. 95 குழந்தைகள் பிறப்பு. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 500

அடுத்த கட்டுரையில்
Show comments