Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்மல்லையா அப்பீல்: இந்தியா அழைத்து வருவதில் சிக்கலா?

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (06:57 IST)
இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய்மல்லையா, கடனை திரும்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பியோடிவிட்டார். அவரை இந்தியா அழைத்து வர மத்திய அரசு சட்டரீதியாக எடுத்த முயற்சியின் அடிப்படையில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என  கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மல்லையா மேல் முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

விஜய் மல்லையாவை நாடு கடத்த அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்துக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின்படி விஜய்மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க, இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் தற்போது நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் முயற்சியில் விஜய்மல்லையா உள்ளார்.

இதுகுறித்து விஜய்மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில் டிசம்பர் 10ஆம் தேதி என்னை இந்தியாவிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் உள்துறை அமைச்சகத்தின் நடவடிக்கையை அடுத்து தற்போது அப்பீல் செய்யவுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். விஜய்மல்லையா மேல்முறையீடு செய்தால் அவரை இந்தியா அழைத்து வருவதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments