ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததற்கு, ரத்தத்தில் குளிக்க வைப்போம் என அல்கொய்தா, ஐ.எஸ். பயங்கரவாத இயக்கங்கள் டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அறிவிப்பு வெளியானது முதலே டிரம்பின் இந்த முடிவிற்கு பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பினை பதிவுசெய்து வருகின்றனர்.
அமெரிக்காவின் ஆதரவு நாடான சவுதி அரேபியா டிரம்பின் இந்த முடிவு சரியானது அல்ல என குற்றம் சாட்டியுள்ளது. டிரம்பின் முடிவு குறித்து விவாதித்து முடிவு எடுக்க ஜோர்டான், அரபு நாடுகள் அவசர கூட்டத்தை நாளை கூட்டுகின்றன. பாலஸ்தீனர்கள் டிரம்பின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அவருடைய உருவப்படம், அமெரிக்க தேசியக்கொடியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இரத்தத்தில் குளிக்க வைப்போம் என அல்கொய்தா, ஐ.எஸ். பயங்கரவாத இயக்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.