Daily Horoscope

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எலிகளுக்க்கு கருத்தடை திட்டம்: ரூ. 1.2 கோடி மதிப்பிலான புதிய முயற்சி!

Advertiesment
rats
அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் டிசியில் பெருகி வரும் எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, அந்நாட்டு அரசு சுமார் ரூ. 1.2 கோடி மதிப்பிலான புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பாரம்பரியமான எலி விஷத்துடன் சேர்த்து, எலிகளுக்கான 'கருத்தடை' முறையையும் சுகாதாரத்துறை பயன்படுத்தவுள்ளது.
 
உணவகங்கள் அதிகம் நிறைந்த ஆடம்ஸ் மோர்கன் பகுதியில் இத்திட்டம் முதற்கட்டமாக செயல்படுத்தப்படுகிறது. எலிகள் கர்ப்பமடைந்து குட்டி போடுவதற்கு எடுக்கும் மூன்று வார காலத்தையே இந்த திட்டத்தின் கால அளவாக அதிகாரிகள் நிர்ணயித்துள்ளனர். முதலில் எலிகளை கொல்லும் விஷம் வைக்கப்படும், அதன் பிறகும் தப்பிக்கும் எலிகள் இனப்பெருக்கம் செய்வதை தடுக்க திரவ வடிவிலான கருத்தடை மருந்துகள் உணவாக வழங்கப்படும்.
 
"எலிகளின் எண்ணிக்கையை குறைப்பதே எங்களின் நோக்கம். ஆனால், மக்கள் உணவுகளை வீதிகளில் வீசுவதை நிறுத்தினால் மட்டுமே இது முழுமையாக சாத்தியப்படும்" என்று சுகாதாரத்துறை இயக்குனர் அயானா பென்னட் தெரிவித்துள்ளார். 
 
ஏற்கனவே 2013-ல் நியூயார்க்கில் இத்தகைய முயற்சி தோல்வியடைந்த நிலையில், தற்போது மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் இத்திட்டம் மீண்டும் சோதிக்கப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிரம்பின் 48 மணி நேர எச்சரிக்கை முட்டாள்தனமானது.. எங்களை தாக்கினால் பதிலடி கொடுப்போம்: ஈரான் எச்சரிக்கை..!