இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில் போர் நிறுத்தம் செய்யாமல் ஓய மாட்டோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு ஆகஸ்டு 7ம் தேதி திடீரென தாக்குதல் நடத்திய பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பினர், ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களை கொன்றதுடன், வெளிநாட்டு பயணிகள் உள்ளிட்ட பலரை பணயக் கைதிகளாக பிடித்து சென்றனர். தற்போது போர் தொடங்கி ஒரு ஆண்டு நேற்றுடன் முடிவடைந்துள்ளது.
இடையே சில பணயக் கைதிகள் மட்டும் திரும்ப ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், 7 அமெரிக்கர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் ஹமாஸ் பிடியில் உள்ளனர். அவர்களை மீட்க போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா ஈடுபட்டு வரும் அதேசமயம், இஸ்ரேலுக்கு போர் உதவிகளையும் செய்து வருகிறது.
இந்த சூழலில் போர் தொடங்கி ஒரு ஆண்டு தாண்டிய நிலையில் அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களிடம் பேசியபோது “பணய கைதிகள் எல்லாரையும் ஹமாஸ் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்கள் குடும்பத்துடன் ஒன்றிணையும் வரை அமெரிக்கா ஓயப்போவதில்லை. ஹமாஸ் அமைப்பு தொடங்கிய போரின் பாதிப்புகளை பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பணயக்கைதிகளை திரும்ப கொண்டு வருவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” எனக் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K