கடந்த 1912ஆம் ஆண்டு டைட்டானிக் என்ற மிகப்பெரிய பயணிகள் கப்பல் தனது முதல் பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளகியது. அந்த கப்பலில் பயணம் செய்த 1500க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்த நிலையில் அந்த கப்பலில் இருந்து தப்பிய ஒரு பயணி, அதே கப்பலில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது அம்மாவுக்கு எழுதிய கடிதத்தை கரைக்கு பத்திரமாக எடுத்து வந்தார்.
அந்த கடிதத்தை அவர் அவருடைய அம்மாவிடம் சேர்க்க முடியாவிட்டாலும் பத்திரமாக பாதுகாத்து வந்தார். இந்த கடிதம் பலரிடம் கைமாறி தற்போது ஏலத்துக்கு வந்துள்ளது.
இங்கிலாந்து நாட்டில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஏலம் ஒன்றில் இந்த கடிதம் இந்திய மதிப்பில் ரூ.8 கோடி வரை ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.