Publish Date: Mon, 09 Nov 2026 (13:43 IST)
Updated Date: Mon, 09 Nov 2026 (13:47 IST)
என்னதான் விஞ்ஞானம் வளர்ந்து விட்டாலும் இன்னும் மனிதர்களுக்கு புலப்படாத விஷயங்கள் என்பது நிறையவே இருக்கிறது. குறிப்பாக இயற்கை சீற்றத்தை எந்த மனிதராலும் கட்டுப்படுத்த முடியாது.
சில நாட்களுக்கு முன்பு கூட நேபாளத்தில் பனிச்சரிவு ஏற்பட்டு பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
ஒரு பக்கம் காலநிலை மாற்றத்தால் மனிதர்கள் பல பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறார்கள். சமீபகாலமாக எல் நினோ என்கிற வார்த்தை செய்திகளில் அடிபடுகிறது. இதன் காரணமாக அதிக அளவு வெப்பம் உருவாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. ஒரு பக்கம் அதிக வெப்பம் காரணமாக பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டமும் உயர்ந்து வருகிறது..
இந்நிலையில்தான், காலநிலை மாற்றத்தால் நிறைய நோய் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. காலநிலை மாற்றத்தால் இதயம், நுரையீரல் புற்றுநோய் மற்றும் ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க