Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலுக்குள் கொக்கைன் கடத்திய பெண் – விமான நிலையத்தில் சிக்கியது எப்படி ?

Webdunia
வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (08:51 IST)
கொலம்பியாவில் பெண் ஒருவர் தன் தொடைப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து போதைப் பொருளைக் கடத்தியதை விமானநிலைய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கொலம்பியாவின் எல்டோரடா விமான நிலையத்தில் பயணிகள் வெளியேறும் பகுதியில் பெண் ஒருவர் சரியாக நடக்க முடியாமல் வந்துள்ளார். அவரை விமான நிலைய அதிகாரிகள் விசாரித்த போது தனது காலில் அடிபட்டதால் அறுவை சிகிச்சை செய்துள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால் அவர் மீது சந்தேகம் வரவே அதிகாரிகள் அவரை ஸ்கேன் பண்ணி பார்த்த போது அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அவரது தொடையில் தையல் போட்ட பகுதியின் உள் மேல் சதைக்குக் கீழ்ப்புறம் பை போன்ற பொருள் ஒன்று இருந்துள்ளது. அதன் பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அறுவை சிகிச்சை செய்து அந்தப் பொருளை எடுத்தபோது அது திரவ வடிவிலான கொக்கைன் எனத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவரைப் போல வறுமையில் இருப்பவர்கள் இதுபோல கொக்கைன் கடத்திச் சென்றால் ஒரு முறைக்கு 3000 முதல் 4000 டாலர் வரைக் கிடைக்கும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து இதன் பின்னணியில் இருப்பவர்கள் என்பது குறித்துப் போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments