Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்க மருந்து கண்டுபிடிக்கிறதுக்குள்ள கொரோனா அழிஞ்சிடும்! – ஹூ அமைப்பின் விஞ்ஞானி ட்வீட்!

Webdunia
செவ்வாய், 19 மே 2020 (09:00 IST)
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ள நிலையில், மருந்து கண்டுபிடிப்பதற்கும் கொரோனாவே அழிந்துவிடும் என விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. பல நாடுகள் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தங்களின் பெரும்பாலான நிதியை செலவிட்டு வருகின்றன. அதன் குறிப்பிட தகுந்த முன்னேற்றமாக சில நாடுகளில் மருந்துகள் பரிசோதனைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. எனினும் முழு மருந்தாக இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பது குறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் புற்றுநோயியல் துறை முன்னாள் விஞ்ஞானியான கரோல் சிகோரா “மனிதர்களுக்கு நாம் எண்ணுவதை விடவும் அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக நம்புகிறேன். அதனால் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தினாலே நோய்க்கிருமி படிபடிப்படியாக வீரியம் குறைந்து தானே அழிந்துவிடும். இதனால் மருந்து கண்டுபிடிக்கும் முன்னரே கூட கொரோனா அழிந்துவிடும் வாய்ப்புள்ளது” என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments