Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2022-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகர்களின் பட்டியல்!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (21:50 IST)
தமிழ் சினிமாவில் 2022 ஆம் ஆண்டில் டாப் 10 இடங்களைப் பிடித்த நடிகர்களின் விவரம் பின்வருமாறு!
  1. கமல்ஹாசன்
கடந்த 1986 ஆம் ஆண்டு ஹிட் பட இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில், கமல் நடிப்பில்,இளையராஜா இசையில் வெளியான படம் விக்ரம். இப்படத்தின் இரண்டாம் பாகம் தான் கமல் எடுப்பார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தபோது, லோகேஷுடன் இணைந்து சூப்பர் ஹிட் படம் கொடுத்து, வசூலிலும் ரூ.400 கோடிக்கு மேல் இப்படம் குவித்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் மூலம் கமலின் சம்பளம் ரூ.100 கோடி எனக் கூறப்படுகிறது.
 
  1. அஜித்குமார்
 நடிகர் அஜித்குமாருக்கு என தமிழககம் தாண்டி, கேரளா உள்ளிட்ட மா நிலங்களிலும், தனி ரசிகர்கள் வட்டாரம் உண்டு.  அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை படம் நல்ல ஓபனிங் மற்றும் வசூலைக் குவித்தது. இதன் மூலம் இவரது அடுத்த படத்தின் சம்பளம் ரூ.100 கோடிக்கு மேல் என்று தகவல் வெளியானது.

 
  1. விஜய்
தமிழ் சினிமாவில் வசூல் மன்னன் எனக் கூறப்படும் விஜய்யின் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் பீஸ்ட். இப்படம் எதிர்பார்த்த இல்லையென்பதால், கலவையான விமர்சனம் பெற்றது. வசூலிலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபம் எனக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு பின்பும் விஜய்யின் சம்பளம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 

     4. சூர்யா
 
சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் என்று ஹாற்றிக் வெற்றி கொடுத்துள்ளார் சூர்யா. அத்துடன் மும்பையில் வசித்து வரும் அவர் சூரரைப் போற்று இந்தி பட தயாரிப்பாளராகவும் பணியாற்றியபடி, சிறுத்தை சிவா இயக்கத்தில் விரைவில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.


    5. தனுஷ்
 
நடிகர் தனுஷின்  நடிப்பில் இந்த ஆண்டு தி கிரே மேன் , நானே வருவேன், திருச்சிற்றம்பலம் ஆகிய 3 படங்கள் ரிலீஸாகி வசூல் சாதனை படைத்துள்ளது. இவர் நடிப்பில் கேப்டன் மில்லர் படமும் தயாராகி வருகிறது.

    6. கார்த்தி
 
 கார்த்தி  நடிப்பில் இந்த ஆண்டில் 3 படங்கள் ரிலீஸாகி உள்ளது. விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் ஆகிய 3 படங்களும் ஹிட் ஆகியுள்ளது. பொன்னியின் செல்வன் சரித்திர வசூல் சாதனை படைத்து, விக்ரம் பட சாதனையை முறியடித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

   7. சிவகார்த்திகேயன்
 
சிவகார்த்திகேயனின் டான் படமும், டாக்டர் படடமும் நல்ல வசூல் சாதனை படைத்த நிலையில், இந்த  ஆண்டு வெளியான  பிரின்ஸ் படம் கலவையான விமர்சனம் பெற்றுள்ளது.

   8.சிம்பு
 
மாநாடு பட வெற்றியைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில், கெளதம் மேனன் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலும் குவித்துள்ளது.

   9.விஷால்

நடிகர் விஷாலின் எனிமி படம் ஹிட் ஆனதை அடுத்து, அவர்  நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும் படம் கவலையான விமர்சனம் பெற்றது. தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள லத்தி படம் விரைவில் வெளியாகவுள்ளது.


  10. சூப்பர் ஸ்டார் ரஜினி
 
நடிகர் ரஜினியின் ஒவ்வொரு படங்களும் ரசிகர்களுக்கு விருந்துதான். சிறுத்தை சிவாவுடன் அவர் கூட்டணி வைத்த அண்ணாத்த படம் (2022) கலவையான விமர்சனம் பெற்றாலும் வசூல் குவித்தது. தற்போது சன் பிக்சர்ஸ்குக்கு நெல்சனுடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இவர்  மற்ற நடிகர்களை விட அதிக சம்பளம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments