கன்னி
கிரகநிலை:
பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சனி, ராஹூ - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றம்:
07.02.2026 அன்று சுக்கிரன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13.02.2026 அன்று சூரியன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21.02.2026 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இந்த மாதம் வாக்கு வன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். ராசிநாதன் புதனின் சார பலம் பலவித நற்பலன்களை அளிக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள். வர்த்தக திறமை அதிகரிக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றமடைவார்கள். இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான முடிவே உண்டாகும். பெண்களுக்கு துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை. கலைத்துறையினர் எந்த காரியத்திலும் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக படித்து முடிப்பீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
உத்திரம்:
இந்த மாதம் தொழிலை விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறலாம். மேல் அதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும்.
ஹஸ்தம்:
இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது. பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். காரியங்களில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
சித்திரை:
இந்த மாதம் தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழுகவனத்துடன் ஈடுபடுவது நல்லது.
பரிகாரம்: நவக்கிரகத்தில் புதனை வணங்க குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பண கஷ்டம் குறையும்.
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ர 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ர 01, 02, 28