Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: மிதுனம்

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (15:36 IST)
ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள்: மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்  திருவாதிரை,  புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:
ராசியில் புதன்,  ராஹூ - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில்  குரு (வ)  - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரக மாற்றங்கள்:
இம்மாதம் 3ம் தேதி புதன் பகவான் ராசியிலிருந்து தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 7ம் தேதி ரண ருண ஸ்தானத்தில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இம்மாதம் 10ம் தேதி செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலிருந்து தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 17ம் தேதி சூரியன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலிருந்து தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 17ம் தேதி சுக்கிரன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலிருந்து தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 21ம் தேதி புதன் பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திலிருந்து தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: 
நண்பர்கள் விசயத்தில் கவனமாக இருக்கும் மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் திட்டமிட்டபடி  காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக  இருக்கும்.  எந்த காரியத்தையும் கடின பிரயாசைக்கு பிறகே செய்ய  வேண்டி இருக்கும்.  எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை  சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது.  லாபம் எதிர்பார்த்ததை விட குறையலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.

குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக  பணிகளை  மேற்கொள்வது நல்லது. எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு  ஏற்படும்.

கலைத்துறையினருக்கு வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தங்கள் உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.

அரசியலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும்.  அடுத்தவர்கள் கடமைக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.  எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும்.

பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம்  உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்ற மடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

உடல்நலனைப் பொறுத்தவரை செவ்வாய் ஆறாம் இடத்தைப் பார்ப்பதால் ரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். நடைப்பயிற்சி செய்வது நன்மையைத் தரும்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் உங்களின் பலமும் வளமும் கூடக்கூடிய காலமாக அமையும். கடந்தகால கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் சுபிட்சமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். கணவன்-மனைவி சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு அரசுவழியில் கடனுதவிகள் கிடைக்கும்.

திருவாதிரை:
இந்த மாதம் உங்கள் தொழிலை விரிவுபடுத்தும் நோக்கம் பலனளிக்கும். பெரிய தொகையை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று நிதானமாக இருப்பது உத்தமம். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் நல்ல லாபம் அமையும். பெயர், புகழ் உயரும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:
இந்த மாதம் எந்தவொரு செயலையும் காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். அரசியல்வாதிகளுக்கு  வருவாய் அதிகரிக்கும். மக்களின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்துவழியில் அனுகூலமான பலன்கள் அமையும்.

பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 4, 5
அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்