Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுக்ரேன் தலைநகர் கீயவில் தாக்குதல்கள் தீவிரமடையும் - ரஷ்யா எச்சரிக்கை

Webdunia
சனி, 16 ஏப்ரல் 2022 (00:05 IST)
யுக்ரேன் தலைநகர் கீயவில் ரஷ்யப்படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் இத்தகைய தாக்குதல்கள் இன்னும் தீவிரமடையும் எனவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
நேற்று ரஷ்யாவின் போர் கப்பலை தாக்கியதாக யுக்ரேன் தெரிவித்திருந்தது. இதனை யுக்ரேனிய "தீவிரவாத தாக்குதல்கள்" அல்லது "நாச வேலைகள்" என தெரிவித்துள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், அதற்கு பதிலடியாக கீயவில் தாக்குதல்கள் தீவிரமடையும் என எச்சரித்துள்ளது.
 
கடல் சார்ந்த கப்பல் ஏவுகணைகள் மூலம் கீயவில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கப்பல் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை உருவாக்கும் தொழிற்சாலை ஒன்றை இரவில் தாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
 
இத்தாக்குதலால் தொழிற்சாலையின் "உற்பத்தி மற்றும் நீண்ட மற்றும் நடுத்தர தொலைவிலான வான் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை பழுதுபார்க்கும் தொழிற்பட்டறைகள் அழிக்கப்பட்டதாக", அந்த அமைச்சகத்தின் டெலிகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சில ரஷ்ய நகரங்களை தாக்குவதற்காக எல்லைகளில் யுக்ரேன் ஹெலிகாப்டர்களை அனுப்புவதாக, வியாழக்கிழமை ரஷ்யா குற்றம்சாட்டியிருந்தது.
 
ரஷ்யாவின் இந்த கூற்றை பிபிசியால் சரிபார்க்க இயலவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென தாக்கிய இடி - மின்னல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் பரிதாப பலி..!

இஸ்ரேல் போருக்கு AI தொழில்நுட்பம் வழங்கி உதவிய மைக்ரோசாப்ட்.. குவியும் கண்டனங்கள்..!

தனக்கு தானே குழந்தை பெற்று உயிருடன் புதைத்த நர்ஸிங் மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி.. இன்று 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை..!

திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments