Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை இனி இந்தியாவில் பயன்படுத்த முடியாதா?

Webdunia
சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை இந்தியாவில் பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்க பாதுகாப்பு நடைமுறை விதிகளை கடுமையாக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் பெரியதொரு ஏற்றுமதி - இறக்குமதியாளராக இந்தியா உள்ளது. ஆனால், இருநாடுகளுக்கு இடையே எல்லை பகுதியில் நிலவி வரும் மோதல் போக்கின்  காரணமாக சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.
 
டிக்-டாக் செயலி உள்ளிட்ட சீனாவின் 200க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு, இந்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. மேலும், ரயில்வே, மின்சாரம், சாலைப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில், ஒப்பந்த பணிகளை மேற்கொண்டிருந்த சீன நிறுவனங்களை மத்திய அரசு உடனடியாக வெளியேற்றியது.
 
இந்த நிலையில், இந்தியாவில் ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், தாங்கள் பயன்படுத்தும் பொருட்கள், நுட்பங்கள் உட்பட, அனைத்திலும், அது எந்த  நாட்டின் தயாரிப்பு என்பதையும், அதன் பின்னணி விவரங்களை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளை உருவாக்கும்  நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இதன் மூலம் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை இந்தியாவில் பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்க  மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments