Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையிடம் சிதைந்த இங்கிலாந்து அணி இப்படி மோசமான ஃபார்மில் தவிப்பது ஏன்?

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (21:43 IST)
பெங்களூருவில் இன்று நடந்த உலகக்கோப்பைப் போட்டியின் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை, 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி தோற்கடித்தது.
 
இலங்கையின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் 33.2 ஓவர்களில் 156 ரன்களில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி சுருண்டது. இங்கிலாந்தை வீழ்த்தி தரவரிசையில் இலங்கை அணி திடீர் முன்னேற்றம் பெற்றுள்ளது.
 
இந்த உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணியின் மோசமான ஃபார்ம் இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது. அந்த அணியில் அதிகபட்ச ஸ்கோர் பென் ஸ்டோக்ஸ் சேர்த்த 43 ரன்கள்தான். மற்ற எந்த பேட்டர்களும் பெரிதாக ரன் ஏதும் ஸ்கோர் செய்யவில்லை.
 
இன்னும் 100 பந்துகள் தாராளமாக மீதமிருக்கும் நிலையில் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. கடந்த இரு போட்டிகளிலும் சேர்த்து இங்கிலாந்து அணி 55.2 ஓவர்கள் மட்டுமே பேட் செய்துள்ளது.
 
கடந்த உலகக்கோப்பைத் தொடரில் ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி எதிரணிகளுக்கு அதிர்ச்சி அளித்து வெற்றி கண்டது. ஆனால், இந்த ஆக்ரோஷமான ஆட்டம் அனைத்து நேரத்திலும் கைகொடுக்காது என்பதை அந்த அணி புரிந்திருக்கவில்லை.
 
இங்கிலாந்து அணி தனது புதுவித ஆக்ரோஷ ஆட்டத்துக்கு இந்த உலகக்கோப்பைத் தொடரில் விலை கொடுத்து வருகிறது.
 
 
இலங்கையிடம் சிதைந்த இங்கிலாந்து அணி இப்படி மோசமான ஃபார்மில் தவிப்பது ஏன்?
 
இலங்கை அணியிடம் வெற்ற பெற வேண்டும் என்ற வேட்கை, துடிப்பு தெரிந்தது. அதனால்தான் பேட்டிங்கிற்கு சாதகமான பெங்களூரு ஆடுகளத்தில் லைன் லென்த் மாறாமல் இலங்கைப் பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர்.
 
இவர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு இங்கிலாந்து அணியின் ஆக்ரோஷமான பேட்டிங்கிற்கு சரியான சவாலாக இருந்தது.
 
ஃபீல்டிங்கிலும் பட்டையைக் கிளப்பிய இலங்கை அணி, இரண்டு ரன் அவுட்களை செய்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கேட்ச்ளையும் கோட்டைவிடாமல் பிடித்து, இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி அளித்தது. 18 மாதங்களுக்குப் பின் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்து பந்துவீசிய ஏஞ்சிலோ மாத்யூஸ், இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார். லஹிரு குமாரா 3 விக்கெட்டுகளை சாய்த்து நெருக்கடி அளித்தார்.
 
இங்கிலாந்து அணி 85 ரன்கள் வரை 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், அடுத்த 70 ரன்களை சேர்ப்பதற்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது. அதிலும் குறிப்பாக 122 ரன்களில் இருந்து 155 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி பறிகொடுத்தது.
 
இலங்கையிடம் சிதைந்த இங்கிலாந்து அணி இப்படி மோசமான ஃபார்மில் தவிப்பது ஏன்?
 
இங்கிலாந்து அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட்(3), கேப்டன் பட்லர்(8), லிவிங்ஸ்டோன்(1), மொயீன் அலி(15), கிறிஸ் வோக்ஸ்(0) ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். ஐபிஎல் தொடரில் மஞ்சள் ஆடை அணிந்து சிஎஸ்கே அணிக்காக பேட் செய்யும்போது பவுண்டரிகளாகவும், சிக்ஸர்களாகவும் விளாசிய மொயீன் அலி, தாய்நாட்டுக்காக ஆடும்போது, உலகக்கோப்பைத் தொடர் முழுவதும் சொதப்பியுள்ளார்.
 
இங்கிலாந்து அணியின் பேட்டர்கள் விளையாடியதே 33.2 ஓவர்கள்தான். ஆனால் அதில் 123 பந்துகளை டாட் பந்துகளாக விட்டுள்ளனர். அதாவது 20 ஓவர்களில் ரன் ஏதும் அடிக்கவில்லை. மீதமுள்ள 13 ஓவர்களில்தான் இங்கிலாந்து பேட்டர்கள் ரன் சேர்த்துள்ளனர்.
 
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 33.2 ஓவர்களில் 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 157 ரன்கள் என்னும் எளிய இலக்கைத் துரத்திய இலங்கை அணி, 25.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
 
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் இலங்கை அணி 2 வெற்றி, 4 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.250 ஆகக் சரிந்துவிட்டது.
 
இலங்கையிடம் சிதைந்த இங்கிலாந்து அணி இப்படி மோசமான ஃபார்மில் தவிப்பது ஏன்?
 
அதேநேரம் இங்கிலாந்து அணி 5 போட்டிகளில் ஒரு வெற்றி 2 புள்ளிகளுடன் 9வது இடத்துக்குச் சரிந்துள்ளது. இனிமேல் அடுத்து வரும் ஆட்டங்கள் அனைத்திலும் இங்கிலாந்து வென்றால்கூட அரையிறுதி வாய்ப்பு வெறும் கனவுதான்.
 
இலங்கை தரப்பில் பதும் நிசங்கா(77), சமரவிக்ரமா(65) ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். மூன்றாவது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து, 137 ரன்கள் சேர்த்து வெற்றிக்குக் காரணமாக அமைந்தனர்.
 
நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், ஒரு நாள் போட்டியில் புதிய பரிமாணத்தைக் கொண்டு வந்த இலங்கையும் இந்த உலகக் கோப்பை தொடரில் பரிதாபமான நிலையில் இருக்கின்றன.
 
இலங்கையிடம் சிதைந்த இங்கிலாந்து அணி இப்படி மோசமான ஃபார்மில் தவிப்பது ஏன்?
 
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணிக்கு இந்த உலகக் கோப்பை பெரும் அதிர்ச்சியான முடிவுகளை வழங்கியுள்ளது. 4 போட்டிகளில் மோதிய இங்கிலாந்து 3 போட்டிகளில் தோல்வி அடைந்து, ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. நிகர ரன்ரேட்டும் படுமோசமாகச் சரிந்துள்ளது.
 
இலங்கை அணி 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்று, 3 போட்டிகளில் தோற்று, 2 புள்ளிகளுடன் உள்ளது.
 
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பேர்ஸ்டோ, டேவிட் மலான் ஆட்டத்தைத் தொடங்கினர். இலங்கை வேகப்பந்துவீச்சாளர் மதுசங்கா வீசிய முதல் ஓவர், முதல்பந்தை பேர்ஸ்டோ எதிர்கொண்டார்.
 
மிகத் துல்லியமாக, இன்ஸ்விங்கரில் வந்த யார்கர், பேர்ஸ்டோவின் விக்கெட்டை குறிவைத்து வீசப்பட்டது. ஆனால், லாகவமாக பேட்டாலும், கால்காப்பிலும் தடுத்ததால் 3 ரன்கள் எடுக்கப்பட்டது. முதல் பந்திலேயே பேர்ஸ்ட்டோவுக்கு பீதியை கிளப்பியது இலங்கை அணி.
 
ஐம்பது ஓவர்கள் உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பாக, குறைவான அளவில் ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாடியதுதான், குறைந்த ரன்கள் சேர்க்க முக்கியக் காரணம்.
பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் பல முக்கிய வீரர்களைத் தேர்வு செய்யவில்லை. காயத்தாலும் சிலரைத் தேர்வு செய்ய முடியாதது பெரிய பலவீனமாக அமைந்தது. குறிப்பாக ஜேஸன் ராய், ஜோப்ரா ஆர்ச்சர், லியாம் பிளங்கெட் போன்றோர் அணியில் இல்லாதது பெரிய பலவீனம்.
இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டி தங்கள் மண்ணில் நடந்தபோது, அதிகமாக ஸ்விங் செய்ய வாய்ப்பு இருந்தது. வேகப்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளங்களாக இங்கிலாந்து மைதானங்கள் இருந்தன. ஆனால், இந்திய ஆடுகளங்கள் அவ்வாறு இல்லாதது இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பெரிய பலவீனம்.
 
இந்தியாவின் காலநிலை, தட்பவெட்பநிலை ஆகியவையும் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஒரு போட்டியில் நல்ல வெயிலும், மற்றொரு நகரில் நடக்கும் போட்டியில் இதமான சூழலும் என மாறி, மாறி இருப்பது அவர்களுக்கு சௌகரியக் குறைவை ஏற்படுத்தியது.
 
குறிப்பாக தொடக்க வீரராக வந்து இங்கிலாந்து ரன்ரேட்டை கடந்த உலகக்கோப்பையில் எகிறச் செய்த ஜேஸன் ராய் இந்த உலகக்கோப்பையில் இல்லாததும், வேகப்பந்துவீச்சாளர் பிளங்கெட் இல்லாததும் பெரிய பின்னடைவு. இருவரின் இடத்தையும் நிரப்ப எந்த வீரரும் தற்போது அணியில் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments