Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் பீதி... நீண்ட நாள் விடுப்பு கேட்டு கடிதம் எழுதிய மாணவன் !

Webdunia
செவ்வாய், 10 மார்ச் 2020 (15:39 IST)
கொரோனா வைரஸ் பீதி... நீண்ட நாள் விடுப்பு கேட்டு கடிதம் எழுதிய மாணவன் !

சென்னை முகலிவாக்கத்தில் வசித்து வரும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், தனக்கு சளி, காய்ச்சல் இருப்பதால் நீண்ட விடுப்பு தரும்  தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுதியுள்ளார். அது வைரல் ஆகி வருகிறது. 
 
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன.
 
இந்நிலையில் சென்னை முதலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவர், தனக்கு சளி, இருமல், அறிகுறிகள் இருப்பதால் நீண்ட விடுப்பு தரும்படி தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுதியுள்ளான். அது தற்போது வைரல் ஆகி வருகிறது.
 
அந்தக் கடிதத்தில், பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் நான். கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்ந வேளையில் எனக்கு சளி , காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால்,இது மற்ற மாணவர்களுக்கு பரவிட வாய்ப்புள்ளது என்பதால் எனக்கு நீண்ட கால விடுப்பு தர வேண்டும் என கூறியுள்ளார். மேலும் அரசாங்கமே சளி, காய்ச்சல் அறிகுறி இருந்தால், மானவர்கள் வர வேண்டாம் என கூறியுள்ளதால்,  நான் மாணவர்களின் நலன் கருதி விடுப்பு எடுக்கிறேன் என்பதால் நன் விடும்றையை வருகை நாளாகப் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
 
இதனையடுத்து, தலைமை ஆசிரியர் மாணவனையும் அவனது பெற்றோரையும் அழைத்து கண்டித்துள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments