தோனியின் ஆட்டத்தைப் பார்க்கவந்த AK.. தோல்வியிலும் ரசிகர்களுக்கு ஆறுதல்!

vinoth
சனி, 26 ஏப்ரல் 2025 (08:15 IST)
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை அணி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் தோற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சில மாறுதல்களை செய்த போதும் பேட்டிங்கில் அது எந்த வகையிலும் பலனளிக்கவில்லை.

சென்னை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 154 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிக பட்சமாக டிவால்ட் பிரேவிஸ் 42 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை.

இதன் பின்னர் களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணி 19 ஆவது ஓவரில் இலக்கை எட்டியது.அந்த அணியின் இஷான் கிஷான் அதிகபட்சமாக 44 ரன்கள் சேர்த்தார்.  இந்த போட்டியில் நான்கு விக்கெட்கள் வீழ்த்திய ஹர்ஷல் படேல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த தோல்வியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப்க்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்த போட்டியில் சென்னை அணித் தோற்றாலும் சென்னை ரசிகர்களுக்கு ஒரே ஆறுதலாக இருந்தது, போட்டியைக் காண நடிகர் அஜித்குமார் தன் குடும்பத்தோடு வந்திருந்ததுதான். சமீப ஆண்டுகளாக அஜித் பொது இடங்களில் தோன்றுவதைத் தவிர்த்து தனி மனிதனாக வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கோப்பை U-19 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. வைபவ் சூர்யவன்ஷி கேப்டன் இல்லையா?

இந்திய மகளிர் அணியின் அடுத்த இலக்கு டி20 உலகக்கோப்பை.. இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடன் மோதல்..!

இந்திய வீரர்களுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்த முன்னாள் கேப்டன் தோனி!

கம்பீர் மீது தவறு இருக்கலாம்… ஆனால் முழுவதும் அவரே காரணமா? –அஸ்வின் ஆதரவு!

WPL மெகா ஏலம் 2026: அதிக விலைக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா.. ஏலம் போகாத ஒரே வீராங்கனை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments