Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுவே தமிழ்நாடு ப்ளேயர் பண்ணிருந்தா தூக்கியிருப்பாங்க! - கில் பேட்டிங் குறித்து பத்ரிநாத் கடும் விமர்சனம்!

Prasanth Karthick
திங்கள், 6 ஜனவரி 2025 (09:40 IST)

நடந்து முடிந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தோல்வி குறித்தும், சுப்மன் கில்லின் ஆட்டம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் விமர்சித்துள்ளார்.

 

 

நடந்து முடிந்த ஆஸ்திரேலியா - இந்தியா டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 3-1 என்ற கணக்கில் படுதோல்வியடைந்தது. இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இந்தியா இழந்தது. இந்த டெஸ்ட் தொடரில் சுப்மன் கில், விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட பலரது ஃபார்ம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

 

சுப்மன் கில்லின் ஆட்டம் குறித்து விமர்சித்து பேசியுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் “BGT தொடரில் ஒரு பேட்டராக சுப்மன் கில் ரன்களை அடிக்கவில்லை. அது முடியாவிட்டாலும் களத்தில் அதிக நேரம் விளையாடி பந்தை பழையதாக்குவதோ அல்லது பவுலர்களை சோர்வடையவோவாவது செய்திருக்க வேண்டும். ஒருவேளை தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் இப்படி விளையாடி இருந்தால் எப்போதோ இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித்தின் ஆட்டம் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை… வருத்தத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்!

சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா RCB.. இன்று பஞ்சாப்புடன் பலப்பரீட்சை!

வான்கடே மைதானத்தில் சிக்ஸரில் சென்ச்சுரி போட்ட ரோஹித் ஷர்மா..! hitman for a reason!

எடு எடு… பாக்கெட்ல இன்னைக்கு என்ன எழுதி வச்சிருக்க… அபிஷேக் ஷர்மாவிடம் ஜாலி பண்ணி SKY!

நாம ஜெயிச்சாலும் CSK வளரவிடக் கூடாது! மும்பை செய்த வன்ம வேலை? - கடுப்பான CSK ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments