Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிக்கு நான் நோட்டீஸ் அனுப்பினேனா? கங்குலி விளக்கம்!

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (10:28 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலிக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக செய்திகள் வெளியாகின.

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி குறுகிய காலத்தில் விலகியதும் விலக்கப்பட்டதும் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டதும், அதன் பிசிசிஐ தந்த விளக்கமும் அந்த விளக்கத்துக்கு முரணான கோலியின் பதிலும் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன. சமீபத்தில் கோலி அளித்த வீடியோ நேர்காணல் கங்குலி மற்றும் ஜெய் ஷா ஆகியோரைக் கடுமையாக அதிருப்தியடைய செய்துள்ளதாக சொலல்ப்படுகிறது.

இது சம்மந்தமாக பிசிசிஐ தலைவர் கங்குலி கோலிக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை கங்குலி இப்போது மறுத்துள்ளார். இது பற்றி விளக்கம் அளித்துள்ள கங்குலி ‘நான் கோலிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக வெளியான செய்தி உண்மையில்லை’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments