Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யகுமார் யாதவ்வை மனம்திறந்து பாராட்டிய ஹர்திக் பாண்ட்யா… ஈகோ எல்லாம் ஓவர்!

vinoth
ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (14:57 IST)
உலகக் கோப்பையை வென்ற கையோடு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. இதனால் இனிமேல் டி 20 அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாதான் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது டி 20 அணிக்குக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ்வை கேப்டனாக இந்திய அணி நிர்வாகம் நியமித்தது.

அதுமட்டுமில்லாமல் ஹர்திக் பாண்ட்யா துணைக் கேப்டன் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் இனி இந்திய அணிக்குக் கேப்டன் பொறுப்புக்கான வீரர்கள் பட்டியலில் இடம்பெற மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் அவர் அடிக்கடி காயத்தால் பாதிக்கப்படுவதுதான் என்று சொல்லப்பட்டது.

இதனால் புதுக்கேப்டன் சூர்யா மேல் ஹர்திக் அதிருப்தியில் இருப்பதாக எல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் நேற்று வங்கதேச அணிக்கு எதிரான தொடர்நாயகன் விருதை வென்றபின்னர் பேசிய ஹர்திக் “கேப்டன் சூர்யகுமார் மற்றும் கம்பீர் ஆகிய இருவரும் என்னை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தனர்” எனப் பாராட்டியுள்ளார். அதே போல சூர்யகுமார் யாதவ்வும் கோப்பையை வென்ற பின்னர் ஹர்திக் கையில் கொடுத்து அவரோடு சேர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் சேர்ப்பு!

நான் எப்போ அழுதேன்… கண்ணு கூசுச்சு – முதல் போட்டி பற்றி மனம் திறந்த சூர்யவன்ஷி!

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments