Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்பே அமெரிக்கா கிளம்பும் இந்திய அணி வீரர்கள்!

vinoth
வெள்ளி, 24 மே 2024 (07:35 IST)
ஜூன் 1 ஆம் தேதி தொடங்கவுள்ள டி 20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ரசிகர்கள் எதிர்பார்த்த சில பெயர்கள் இடம்பெறவில்லை. அதில் மிக முக்கியமானதாக சமீபகாலமாக டி 20 போட்டிகளில் கலக்கி வரும் ரிங்கு சிங் பெயர் இடம்பெறாததுதான். அதே போல அணியில் நான்கு சுழல் பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருந்தார்கள். அதுவும் தேவையில்லாதது என சொல்லப்பட்டது. இப்படி அந்த அணி மீது சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த தொடரில் இந்திய அணிக்கான போட்டி ஜூன் 5 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக இந்திய அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்பாகவே அமெரிக்கா செல்கிறது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்த அணியில் தற்போது ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றில் இருக்கும் வீரர்கள் மட்டும் செல்ல மாட்டார்கள்.

உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள சஞ்சு சாம்சன், ஆவேஷ் கான், சாஹல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் ஆகியோர் ஐபிஎல் போட்டிகள் முடிந்த பின்னர் கிளம்புவார்கள் என்று சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிவேக சிக்ஸர்கள்.. தோனி, கோலி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

அறிமுக போட்டியிலேயே அபாரம்.. 14 வயது சூர்யவன்ஷிக்கு LSG உரிமையாளர் பாராட்டு..!

அகமதாபாத் மைதானத்தில் வெயிலில் வாடிவதங்கும் பார்வையாளர்களுக்கு குஜராத் அணி உதவி!

சொந்த மைதானத்தில் அதிக முறை தோல்வி… மோசமான சாதனையைப் படைத்த RCB!

தொடரும் ஹோம் கிரவுண்ட் சோகம்… மீண்டும் வீழ்ந்த பெங்களூரு அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments