Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் ஒன் அணியான பாகிஸ்தான்..!

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (11:25 IST)
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை ஐசிசி அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் மீண்டும் நம்பர் 1 அணியாக முன்னேற்றம் கண்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியை ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் இடத்திலிருந்து பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது பாகிஸ்தான். சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வொயிட்வாஷ் செய்ததின் மூலம் நம்பர் 1 இடத்துக்கு முன்னேறியுள்ளது பாகிஸ்தான்.

விரைவில் ஆசியக் கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக பாகிஸ்தான் அணி ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடித்திருப்பது அந்த அணிக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்தியா அணி தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள நிலையில் ஆசியக் கோப்பை வென்றால் பாகிஸ்தானுக்கு கடும்போட்டி கொடுக்க வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments