Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய சாதனை படைக்கும் முனைப்பில் ரோஹித் சர்மா

Sinoj
செவ்வாய், 9 ஜனவரி 2024 (13:40 IST)
இந்திய கிரிக்கெட் அணி, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இத்தொடர் வரும்  ஜனவரி 11 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி கடந்த 7 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இத்தொடரில் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்தில் காயம் காரணமாக ஹர்த்திக் பாண்ட்யா சிகிச்சை பெற்று வரும் நிலையில், ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார்.

இந்த நிலையில், ரோஹித் சர்மா  51 டி 20 போட்டிகளில் கேப்டனாக இருந்து 39 வெற்றிகள் பெற்றுக் கொடுத்திருக்கிறார். 12 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார்.

ரோகித் சர்மா இந்திய அணிக்காக 148 டி 20 போட்டிகளில் விளையாடி  இதுவரை 3853 ரன்கள் அடித்துள்ளார். இதில், 4 சதம் மற்றும் 29 அரைதங்கள் அடங்கும்.

மேலும், டி 20 போட்டிகளில் ரோகித் சர்மா 182 சிக்ஸர்கள் அடித்துள்ள நிலையில், இன்னும் 18 சிக்ஸர்கள் அடித்தால் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மீண்டும் தொடங்கும்போது ‘அதெல்லாம்’ இருக்கக் கூடாது – சுனில் கவாஸ்கர் கோரிக்கை!

ப்ரீத்தி ஜிந்தாவை மேக்ஸ்வெலுடன் தொடர்பு படுத்தி பேசிய ரசிகர்! - ப்ரீத்தி ஜிந்தா கொடுத்த பதிலடி!

கோலி, ரோஹித் இந்திய அணியில் இல்லைன்னு யார் சொன்னா? - பிசிசிஐ செயலாளர் கொடுத்த அப்டேட்!

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்! - சுனில் கவாஸ்கர் வேண்டுகோள்!

ஐபிஎல் தொடங்கும் அதே நாளில் பி.எஸ்.எல் போட்டிகளை தொடங்கும் பாகிஸ்தான்! வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments