சாய் சுதர்சனின் அபார இன்னிங்ஸ்.. ராஜஸ்தானை வீழ்த்தி முதலிடத்துக்கு சென்ற குஜராத் டைட்டன்ஸ்!

vinoth
வியாழன், 10 ஏப்ரல் 2025 (07:51 IST)
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட்களை இழந்து 217 ரன்கள் சேர்த்தது. குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி 53 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்தார்.

அவருக்குத் துணையாக ஜோஸ் பட்லர் மற்றும் ஷாருக் கான் ஆகியோரின் அதிரடி இன்னிங்ஸ்கள் அமைந்தன.  இதையடுத்து பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்ததால் அந்த அணியால் இலக்கைத் துரத்த முடியவில்லை.

இதனால் அந்த அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணியின் ஷிம்ரான் ஹெட்மெய்ர் அதிகபட்சமாக 52 ரன்கள் சேர்த்தார். இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 4 வெற்றிகளோடு முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments