Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா பைனலுக்கு வரவேண்டும்… ஆசைப்படும் பாகிஸ்தான் வீரர்!

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (17:03 IST)
இந்திய அணி பைனலுக்கு வந்து மீண்டும் பாகிஸ்தானிடம் தோற்கவேண்டும் என ஆசைப்படுவதாக சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பையின் முதல் இரு போட்டிகளை தோற்ற இந்திய அணி இப்போது வெற்றிப்பாதைக்கு திரும்பி புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல ஒரே ஒரு வாய்ப்புதான் உள்ளது. அது என்னவென்றால் ஆப்கானிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையே 7 ஆம் தேதி நடக்கும் போட்டியில் ஆப்கான் அணி வெற்றி பெற வேண்டும்.

நேற்று ஸ்காட்லாந்து அணியை இந்தியா 7 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் ரன்ரேட் உயர்ந்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு முன்னால் நாம் உள்ளோம். இந்நிலையில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல ஒரே ஒரு வாய்ப்புதான் உள்ளது. அது என்னவென்றால் ஆப்கானிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையே 7 ஆம் தேதி நடக்கும் போட்டியில் ஆப்கான் அணி வெற்றி பெற வேண்டும்.

இதுபற்றி பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் ‘தனிப்பட்ட முறையில் இந்தியா பைனலுக்கு வரவேண்டும் என ஆசைப்படுகிறேன். இந்தியாவும் பாகிஸ்தானும் பைனலில் மோதி மீண்டும் பாகிஸ்தான் வெற்றி பெறவேண்டும். அப்படி நடந்தால் அது பிரம்மாண்டமான கிரிக்கெட்டாக இருக்கும்.’ எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்… கிங் கோலி படைத்த புதிய சாதனை!

‘சில நேரங்களில் தோல்வியும் நல்லதுதான்’… ஆர் சி பி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments