Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

Webdunia
சனி, 24 மே 2025 (15:28 IST)
இந்திய அணி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இருந்த பெரும்பாலான வீரர்கள் மீண்டும் இடம் பிடிக்க உள்ளனர். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றதால், இந்திய ஏ அணியில் உள்ள சிலர் தேசிய அணியில் வர வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்து செல்லும் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்குக் கேப்டனாக ஷுப்மன் கில்லும், துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 25 வயதாகும் ஷுப்மன் கில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா போன்ற அனுபவம் மிக்க வீரர்களுக்குப் பிறகு இந்திய அணியை வழிநடத்த உள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சர்பராஸ் கானுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

இந்திய அணி

ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (து. கேப்டன்), ஜெய்ஸ்வால், கே எல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதீஷ்குமார் ரெட்டி, ரவீந்தர ஜடேஜா, துருவ் ஜுரெல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜாஸ்ப்ரீத் பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா,ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்… கிங் கோலி படைத்த புதிய சாதனை!

‘சில நேரங்களில் தோல்வியும் நல்லதுதான்’… ஆர் சி பி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா!

ஆறுதல் வெற்றியா இருந்தாலும் பரவாயில்ல! ஆர்சிபியை ஆல் அவுட் ஆக்கிய சன்ரைசர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments